எஜமானர் மீது அளவுகடந்த பாசம்.. பல கி.மீ ஆம்புலன்ஸ் பின்னே ஓடி வந்த நாய்.. வைரலாகும் வீடியோ

துருக்கியில் உரிமையாளர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதை அறிந்த நாய்  பல கிலோமீட்டர் ஆம்புலன்ஸ் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் ரெட்ரீவர் வகையினை சேர்ந்த நாயினை வளர்த்து வருகிறார்.

அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் போகவே , ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டது.

அவர் மருத்துவமனைக்கு செல்வதை அறிந்த அவரது பாசக்கார நாய்  அவரது மீது கொண்ட அன்பினால் பல கிலோமீட்டர் ஆம்புலன்ஸ் மருத்துவமனை வரும் வரை ஓடி வந்துள்ளது.

தற்போது அவர் மீண்டும் எப்போது   வீட்டுக்குவருவார் என நாய் காத்திருக்கும் காட்சி காண்போரை திகைக்க  வைத்துள்ளது.

இதனை பார்க்கும் போது கண்ணாதாசன் பாடலான பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் .. பாடல்தான் ஒத்து போவதாக கூறுகின்றனர்  இணைய வாசிகள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்