காபூலில் இருந்து 120 பேருடன் தாயகம் திரும்ப புறப்பட்டது விமானம்
120 இந்தியர்களை அழைத்து கொண்டு காபூல் விமானநிலையத்தில் இருந்து தாயகம் திரும்ப விமானம் புறப்பட்டது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்ததால் அப்பகுதி முழுவதும் போர்களமாக மாறியுள்ளது.
இதனால், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு காபூலில் இருந்து தாயகம் திரும்பியது ஏர் இந்திய விமானம்.

இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், என அனைவரையும் அழைத்து வருகிறது.
முதற்கட்டமாக காபூலில் இருந்து 129 பயணிகள் தாயகம் திரும்பிய நிலையில், தற்போது மேலும், 120 பயணிகளுடன் இந்தியா புறப்பட்டது.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
e-Emergency x-misc visa என்ற நடைமுறையால் இந்தியர்கள் விரைவில் விசா பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.