கர்நாடக மாநில எல்லையில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயலால் பரபரப்பு

shooting advocate dead excitement
By Nandhini Jan 06, 2022 03:34 AM GMT
Report

கர்நாடக மாநிலம். பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் வழக்கறிஞர் தொழில் செய்து வந்துள்ளார்.

இவர் இன்று வழக்கு ஒன்றுக்காக கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் சென்ற அவர் பணிகள் முடிந்தவிட்டு, பின்னர் ஆனைக்கல் நகர வீதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் அவரது காரின் வலது பக்க கண்ணாடியில் சுட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் ராஜசேகர் கழுத்தில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆனைக்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் ராஜசேகர ரெட்டி என்பது விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகள் யார் இவர்களுக்குள் என்ன தகராறு இருந்து வந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக மாநில எல்லையில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயலால் பரபரப்பு | Advocate Dead Shooting Excitement