சூடுபிடிக்கும் ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - பின்னணியில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ;வெளியான புதிய தகவல்
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதன் பின்னணியில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இருந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவியை கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, சக ஆராய்ச்சி மாணவனான கிங்ஷீக்தேவ் சர்மா, தன் நண்பர்களும் ஆராய்ச்சி மாணவகர்களுமான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திலும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து மாணவி அளித்த புகாரின்பேரில் ஐஐடி ஆராய்ச்சி மாணவரான கிங்ஷீக்தேவ் ஷர்மா உள்பட 8 பேர் மீது ஐபிசி 354, 354(பி), 354(சி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாதர் சங்கத்தின் அழுத்தத்தின் பேரில் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை மயிலாப்பூர் போலீசார் மேற்குவங்கம் விரைந்து கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த கிங்ஷுகு தேப்சர்மாவை கடந்த மாதம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே தான் பெற்றிருந்த முன்ஜாமீன் உத்தரவை காண்பித்து நீதிமன்றத்தால் விடுதலை செய்ப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து நேற்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி மயிலாப்பூர் காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது. இதற்கு காரணம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த பட்டியலின மாணவி, நண்பர்களின் உதவியுடன் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை நேரில் சென்று சந்தித்து உதவி கேட்டுள்ளார்.
அவர் காட்டிய வழிகள் அறிவுரைகள் மற்றும் உரிய சட்ட ஆலோசனைகளை பாதிக்கப்பட்ட பெண் பின்பற்றியதோடு மாதர் சங்கத்தின் சார்பிலும் காவல் துறைக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஓய்வுபெற்ற பிறகும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நீதிபதி சந்துருவின் செயல் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.