சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்கள் : நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்

By Irumporai May 31, 2023 02:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல் வழங்கிய வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

  சாட்ஜிபிடி

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உணவுப் பொருள்களை கொண்டு வரும் ட்ராலி தனது கால் முட்டியில் மோதி காயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து அவர் விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிகிறது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி வழக்கறிஞர் ஒருவர் வாதிட்ட நிலையில் அவர் இதற்கு முன் இதே போன்ற வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் குறித்து பார்த்த ஆவணங்களை தாக்கல் செய்தார்.

சாட் ஜிபிடி உதவியுடன் தவறான தகவல்கள் : நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர் | Advocate Apology Who Used Chatgpt In Court

டெல்டா ஏர்லைன்ஸ் கொரியன் ஏர்லைன்ஸ் உள்பட பல விமான நிறுவனங்களின் பெயர்கள் அதில் இருந்ததை அடுத்து அந்த வழக்கறிஞர் இந்த விபரங்களை சாட் ஜிபிடிமூலம் எடுத்துள்ளதாக தெரியவந்தது.  

நீதிமன்றத்தில் மன்னிப்பு

ஆனால் சாட் ஜிபிடி மூலம் எடுக்கப்பட்ட அந்த விவரங்கள் தவறானது என்று தெரியவந்ததை அடுத்து தான் திரட்டிய தகவல்கள் தவறானது என ஒப்புக்கொண்டு அவர் நீதிபதி விட மன்னிப்பு கூறினார்.

சாட் ஜிபிடி தளத்தில் ஒரு விஷயத்தை தேடினால் அது தவறான தகவல்களை அளிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் எனவே அந்த தகவலை வைத்து நீதிமன்றத்தில் வாதிட கூடாது என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.