தமிழக அரசின் ஆலோசகர் சண்முகம் ஐ.ஏ.எஸ் ராஜினாமா
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று 6 வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.
மே 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக அரசின் நிர்வாகத்திலும் பல அதிரடியான மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்பட்டு வந்தது. அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று பேசப்பட்டது
தற்போது முன்னாள் தலைமைச் செயலாளரும் தற்போது அரசு ஆலோசகருமான சண்முகம் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பதவிக்காலம் முடிந்த பிறகும் சண்முகம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு அரசின் ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.