ரிஷப் பந்த் கார் விபத்து - முன்பே எச்சரித்த ஷிகர் தவான்... - வைரலாகும் வீடியோ..!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு, வீரர் ஷிகர் தவான் முன்பே எச்சரித்துள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்
இன்று ரிஷப் பந்த் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கழிக்க டெல்லியிலிருந்து ரூர்க்கிக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். இச்செய்தி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீப்பிடித்து எரிந்த காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி உயிர் தப்பினார் ரிஷப் பந்த். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பந்த்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் பந்த்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பந்த் விபத்துக்குள்ளான சில மணி நேரங்களுக்குப் பிறகு பிசிசிஐ ஒரு அறிக்கையை வெளியிட்டது, அவரது காயங்களின் முழு தன்மையையும் வெளிப்படுத்தியது.
அந்த அறிக்கையில், பந்தின் நெற்றியில் இரண்டு வெட்டுக்கள், வலது முழங்காலில் தசைநார் காயம் மற்றும் வலது மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கால்விரலில் காயங்கள் மற்றும் முதுகில் சிராய்ப்புகள் உள்ளன. பேன்ட்டின் உடல்நிலை சீராக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் மீண்டு வருவதற்கான அடுத்த கட்டத்தை தீர்மானிக்க விரைவில் அவர் எம்ஆர்ஐக்கு உட்படுத்தப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

முன்பே எச்சரித்த ஷிகர் தவான்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், எப்போமே காரை மெதுவா ஓட்டணும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு, வீரர் ஷிகர் தவான் முன்பே அறிவுரை வழங்கியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
the most valuable advice was given by shikhar dhawan to pant ♥️#RishabhPant #BCCI @DelhiCapitals pic.twitter.com/SshMBapvFL
— ?वसुसेन? (@Mrutyyunjay) December 30, 2022
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு.. IBC Tamil
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு' விருதை அர்ப்பணிகின்றேன்! நவநீதம் பிள்ளை நெகிழ்ச்சி IBC Tamil