மிரட்டும் வடகிழக்கு பருவமழை :முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன ?
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது , இந்த நிலையில் நேற்று சென்னையில் பெய்த கன மழை காரணமாக சாலையின் பல இடங்களில் மழை நீரானது ஆறாக ஓடியது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் மழை நடவடிக்கை குறித்து காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்
அதில் :
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் .
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்பு போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலங்களிலும் இருக்கக்கூடிய பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். பழுதடைந்து இருக்க கூடிய பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும் .
பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் மின்சார வசதி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் .
அரசுத்துறையில் உடன் மக்களுடன் இணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நோய் பரவாமல் தடுக்க வேண்டும் மின்சாரம் சார்ந்த விபத்துகளை தடுக்க வேண்டும்