குடிபோதையில் ரகளை : விளம்பர பலகையில் தொங்கியபடி பஸ் மீது விழுந்த நபர் - வைரலாகும் வீடியோ
தெலுங்கானாவில் குடிபோதையில் விளம்பர பலகையில் தொங்கியபடி பேருந்தின் மீது விழுந்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடிபோதையில் ரகளை
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டையில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் சாலையில் உள்ள விளம்பர பலகையில் தொங்கி அட்டாகாசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் சித்திபேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்பட்டனர். பொதுமக்கள் அவரை காப்பாற்ற விளம்பர பலகை மீது ஏற முயற்சி செய்தனர்.

வைரலாகும் வீடியோ
சிறிது நேரத்தில் அந்த நபர் கீழே வந்த மினி பேருந்தின் மீது விழுந்தார். பேருந்தில் விழுந்த அவரை பொதுமக்கள் கீழே இறக்கி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அனுப்பினர்.
This is the Situation in #Siddipet
— Maruthi (@Maruthi0305) January 11, 2023
Mr.@trsharish Do you have an Answer?@BRSparty #KCRFailedTelangana
pic.twitter.com/u5yzfRv5FD
இதுகுறித்து சித்திபேட்டை போலீஸ் கமிஷனர் கூறுகையில் அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.