இனி பி.எஃப் முன்பணம் எடுக்க முடியாது - அதிர்ச்சியில் ஊழியர்கள்!
பி.எஃப் முன்பணம் எடுக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக இருந்து வருகிறது. இந்த வைப்பு நிதிக்கு பணிபுரியும் நிறுவனமும், பணியாளரும் சமமான தொகையை வழங்குகிறார்கள்.
பணியாளர் ஓய்வுபெற்றபின் இந்த பணம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நிதி பாதுகாப்பை ஊழியருக்கு அளிக்கிறது.
ஊழியர்கள் அதிர்ச்சி
இந்த வைப்பு நிதி தொகையிலிருந்து முன் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் அனுமதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது வரை 2.2 கோடி சந்தாதாரர்கள் பிஎஃப் தொகையிலிருந்து முன் பணத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், வருங்கால வைப்பு நிதி வாரியம் இனி பிஎஃப் தொகையிலிருந்து முன்பணத்தை சந்தாதாரர்கள் பெற முடியாது. முன்பணம் எடுக்கும் ஊழியர்கள் இந்த தொகையை தேவையற்ற செலவாக செய்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு நபர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கு முன் 2 மாதங்கள் வேலையில்லாமல் இருந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.