ஆவின் பணி நியமன முறைகேடு : 170 பேர் பணி நீக்கம்
மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணி நியமனம் மூலம் சேர்ந்த பலர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,
ஆவின் முறைகேடு
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை மாநிலம் முழுவதும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பணியில் சேர முறையான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
பணியில் சேர முறைகேடு
இந்நிலையில் கடந்த 2020-2021ம் ஆண்டில் மதுரை ஆவினில் முறையான தேர்வு முறைகளை பின்பற்றாமலும், பணியிடங்கள் காலியாக இல்லாத நிலையிலும் கூடுதல் பணியாளர்களை நேரடியாக நியமித்தது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் முறைகேடாக நேரடி நியமனங்கள் நடைபெற்றது அம்பலமாகியுள்ள நிலையில் நேரடி நியமனங்கள் மூலம் பணி பெற்ற 170 பேரை பணிநீக்கம் செய்து ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னதாக சுமார் 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆவின் நிர்வாகம் மீண்டும் பணிநீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.