நிர்வாணப்படத்தை வெளியிட்டுவிடுவேன் என 15 வயது சிறுமியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் : போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது
சேலம் குகை பகுதியை செர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கு, தனது உறவினரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த 23 வயதான சசிகுமார் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சசிகுமார் ஒரு கட்டத்தில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அனுப்பும்படி மாணவியிடம் கேட்டுள்ளார்.
என்ன செய்வதென்று தெரியாத 15 வயது சிறுமி சசிகுமார் கேட்டுக்கொண்டபடியே நடந்துள்ளார். அதன்படி மாணவி தன்னுடைய நிர்வாண படத்தை சசிகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி அனுப்பிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டிய சசிகுகார் பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாத மாணவி தனது தாத்தா வீட்டில் இருந்து சிறுக சிறுக 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை பல தவணைகளாக கொடுத்துள்ளார்.
ஒருக்கடத்தில் சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இதனை அடுத்து சேலம் டவுன் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி விரைந்த காவல் துறையினர் சசிகுமாரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சசிகுமாரின் செல் போனில் மாணவியின் புகைப்படங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.