ஏலம் போன ஹிட்லரின் கைக்கடிகாரம் : எத்தனை கோடி தெரியுமா?

By Irumporai Jul 31, 2022 06:21 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் இந்திய மதிப்பில் 8.6 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது .

ஹிட்லர்

ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் இந்த பெயரை அவ்வுளவு எளிதில் யாரும் மறுக்க முடியாது இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியை வழிநடத்தி சுமார் 11 மில்லியன் மக்களை ஹிட்லர் கொன்று குவித்தார்.

ஏலத்திற்கு வந்த கடிகாரம்

இதன்மூலம் உலகின் கொடூரமான சர்வாதிகாரிகளில் ஒருவராக கருதப்படும் உலகத் தலைவர்களில் ஹிட்லருக்கு முக்கியமான இடம் உண்டு, இந்த நிலையில் ஹிடலர் பயன்படுத்திய ஆண்ட்ரியாஸ் ஹூபர் என்ற இந்த கைக்கடிகாரம் தற்போது ஏலத்திற்கு வந்தது.

ஏலம் போன ஹிட்லரின் கைக்கடிகாரம் : எத்தனை கோடி தெரியுமா? | Adolf Hitlers Watch Sells For 1 1 Million

அதில் நாசிக்களின் சின்னமான கழுகு மற்றும் ஸ்வஸ்திக்கா சின்னம் மற்றும் ஹிட்லரின் பிறந்தநாள் அதிபராகப் பதவியேற்ற நாள், ஜெர்மனியில் ஹிட்லர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் நாள் போன்றவை இந்த கடிகாரத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.

சர்ச்சையான விவகாரம்

இந்த கடிகாரம் ஏப்ரல் 20, 1933 ஹிட்லரின் 44வது பிறந்த நாளின் போது பரிசாக ஜெர்மனியின் தேசியவாத சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களால் பரிசாக அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது

ஏலம் போன ஹிட்லரின் கைக்கடிகாரம் : எத்தனை கோடி தெரியுமா? | Adolf Hitlers Watch Sells For 1 1 Million

. வாட்ச் ப்ரோ என்ற பிரபல இதழின் அறிக்கையின் படி ஹிட்லரின் கைக்கடிகாரம் வெள்ளிக்கிழமை மே 04,1945 ஆம் ஆண்டு ஹிட்லர் பெர்ச்டெஸ்காடனில் பின்வாங்கிய போது அங்கு வந்த பிரெஞ்சு ராணுவ வீரனால் எடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகு பல தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் கை மாறி தற்போது விற்பனைக்கு வந்ததாகவும் கூறுகிறது.

8 .7கோடி ஏலம்

மேலும் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கடிகாரத்தை தீவிரமாக ஆராய்ந்து அது ஹிட்லர் (Adolf Hitler) தான் உபயோகப்படுத்தினார் என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த கடிகாரத்தினை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விடுவதாக செய்தி வெளியிட்டபோது

யூத தலைவர்கள் 34 பேர் ஏல நிறுவனத்தை கண்டித்து கடிதம் எழுதிய போது வரலாற்றை அழித்துவிட்டால், அது நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இருக்காது வரலாற்றுப் ஆவணங்களை பாதுகாப்பதே எங்களது நோக்கம் என்று ஏல நிறுவனம் விளக்கம் கொடுத்தது.

இந்த நிலையில் சர்வாதிகாரி ஹிட்லர் பயனபடுத்திய கைக்கடிகாரம் அமெரிக்காவில் நட்ந்த ஏலத்தில் 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.7 கோடியாகும் இந்த கடிகாரத்தினை சொந்தமாக்கியது யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது, ஹிட்லரின் மரணம் போலவே