எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. சர்ச்சையான ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

admk pandiarajan spvelumani
By Irumporai Aug 10, 2021 04:58 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்சஒழிப்புத்துறை சோதனை பற்றி தான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தி.மு.க. அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொணடு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்.

அவர்களின் சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களையும், முக்கிய கோப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதே போல் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நேற்று (10.82020)  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

 எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை பல மணிநேரம் நடத்தப்பட்டது. மேலும், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மூன்று பைகள் நிறைய ஆவணங்களும், முக்கிய கோப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழக அர்சியலில் பரபரப்பை ஏற்படுத்த வேலூர் சரவணன் என்ற தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி தனது ட்விட்டர் பக்கத்தில், வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாக பதிவிட்டிருந்தார்

இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் தமிழ்த்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் வேலூர் சரவணனின் பதிவிற்கு கீழ், தயவு செய்து இந்த போலியான செய்தியை நிறுத்துங்கள். நான் இதுபோன்று சொல்லவே இல்லைஎன்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தான் இனி தன்னுடைய தொழிலில் 100 சதவீத கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதனால் அரசியல்வாதியாக ஊடகத்தின்முன்பு வரமாட்டேன் என்றும் கூறிருந்தது குறிப்பிடத்தக்கது.