இனிமே அதிமுக வெற்றி பெறும் : எடப்பாடிபழனிச்சாமி கருத்து

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Apr 05, 2023 03:52 AM GMT
Report

இனி எந்த தேர்தால் வந்தாலும் இனி அதிமுக வெற்றி பெறும் என்று அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடிபழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் 

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய எடப்பாடிபழனிச்சாமி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தோம். ஏக மனதாக என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும்.

இனிமே அதிமுக வெற்றி பெறும் : எடப்பாடிபழனிச்சாமி கருத்து | Admk Will Win Any Election Edappadi Palaniswami

 அதிமுக வெற்றி பெறும்

அ.தி.மு.க. அப்படி அல்ல. சாதாரண தொண்டனை மதிக்க கூடிய கட்சி அ.தி.மு.க. தான். தி.மு.க. ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நெருங்கி இருக்கிறது. என்ன செய்தார்கள்? மக்கள் விரோத ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. கோவைக்கு அ.தி.மு.க.தான் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்தது. கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை.

சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம் உள்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்களின் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை. இப்போது இருந்தே தேர்தல் பணியை தொடங்க வேண்டும் என கூறினார்.