ரூ.50 கோடி செலவு செஞ்சாலும் அதிமுக ஜெயிக்க முடியாது - சி.வி.சண்முகம் எச்சரிக்கை

admk formerministercvshanmugam
By Petchi Avudaiappan Dec 21, 2021 04:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

அதிமுகவில் கிளைக் கழகத்தை கட்டமைக்காவிட்டால் ரூ.50 கோடி செலவு செய்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சியின் அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓஎஸ்.மணியன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரூ.50 கோடி செலவு செஞ்சாலும் அதிமுக ஜெயிக்க முடியாது - சி.வி.சண்முகம் எச்சரிக்கை | Admk Will Not Win If It Does Not Ensure The Infra

நிகழ்ச்சியில் பேசிய சி.வி.சண்முகம் அதிமுகவின் உட்கட்டமைப்பினை உறுதிபடுத்தவில்லை என்றால் 50 கோடி செலவு செய்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும், இன்னும் நாலரை ஆண்டுகள் உள்ள நிலையில் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் அனைவரும் ஒருமனதாக ஒன்றினைந்து செயல்பட்டு நிர்வாகிகளை தேர்தெடுக்க வேண்டுமெனவும் கூறினார். 

மேலும் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சியின் உட்கட்டமைப்பினை உறுதிபடுத்த வேண்டும் இல்லையென்றால் 50 கோடி செலவு செய்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.