அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-கள் இடையே கடும் வாக்குவாதம்..எதனால் தெரியுமா?

opposition leader admk ops eps
By Praveen May 07, 2021 01:14 PM GMT
Report

தமிழக சட்டசபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று நடந்த அதிமுக மீட்டிங்கில் பெரிய பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எ

திர்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தத்தை தெரிவித்ததால் அதிமுக அலுவலகத்தில் நடந்த மீட்டிங்கில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. தமிழக சட்டசபையில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்று தோல்வியை தழுவி உள்ளது. இதில் 66 இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் அதிமுக பிரதான எதிர்கட்சியாகி உள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது அதிமுக உள்ளது. இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முன்னாள் முதல்வர் இபிஎஸ் - முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பாக காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று அதிமுக அலுவலகத்தில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு இதற்காக அவசர அழைப்பு விடுக்கப்பட்டு, கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இந்த மீட்டிங்கிற்கு தலைமை வகிக்கிறார்கள். 66 அதிமுக எம்எல்ஏக்களில் 63 பேர் மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்கத்தில் மீட்டிங் கொஞ்சமாக அமைதியாகவே நடந்து இருக்கிறது. ஆனால் போக போக எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுக எம்எல்ஏக்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் என்று விடாப்பிடியாக கூறியுள்ளனர்.

ஜெயலலிதா இரண்டு தரப்புக்கும் பாதிக்கு பாதி ஆதரவு இருந்ததால் வாக்குவாதம் பெரிதாகி உள்ளது. இபிஎஸ் முதல்வராக இருந்துவிட்டார். அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார். இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் இபிஎஸ் ஆசைப்பட கூடாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் ஓபிஎஸ்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பேசி உள்ளனர். ஆதரவு எம்எல்ஏக்கள் அதோடு தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்று ஓபிஎஸ்ஸும் உறுதியாக மீட்டிங்கில் தெரிவித்துள்ளராம்.

ஜெயலலிதா இருந்த போது கட்சியில் நான்தான் நம்பர் 2. சட்டசபையிலும் நான்தான் நம்பர் 2. இதனால் இப்போது நான்தான் எதிர்கட்சித் தலைவர் என்று ஓபிஎஸ் வாதம் வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை இன்று மீட்டிங்கில் இபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுக வென்ற 63 தொகுதிகளில் பல இபிஎஸ் முகத்திற்காக விழுந்த தொகுதிகள். அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதால், இப்போது அவர்தான் எதிர்க்கட்சி தலைவர், கொங்கில் அதிமுக அதிக இடம் வென்றதால்தான் 66 இடங்களாவது நமக்கு கிடைத்தது என்று இபிஎஸ் தரப்பு வாதம் வைத்திருக்கிறது. 

இதையடுத்து பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், வன்னியர் இடஒதுக்கீடு போன்ற இபிஎஸ் செய்த தவறான முடிவுதான் தெற்கில் நாம் தோல்வி அடைய காரணம். அதனால் அவரை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் மீட்டிங்கில் காரசார விவாதம் நடந்து இருக்கிறது.

இதில் சில அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும். அவர்தான் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு எம்எல்ஏ பேசியதாக கூறப்படுகிறது இதனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.