அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் இருக்கா? விளக்கம் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

minister parliament dmk
By Jon Feb 18, 2021 02:15 PM GMT
Report

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அதிமுகவில் எந்த உரிமையும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது . போகிற வருபவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என கூறினார்.

மேலும் புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்கு அளிக்கும் என்றும் முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி மொழி பெயர்த்தது வருத்தமளிப்பதாகவும். மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை. அதை தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் உள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயக்குமார்அதிமுக அறிக்கையில் இலவச வாசிங்மிஷின் தருவதாக உள்ளது உண்மை இல்லை என்றார்.