தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டத் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறைகளுக்கான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
இதற்கு மத்தியில், தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். திருவிழா காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
முன்னதாக தஞ்சையில் நிகழ்ந்த தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவண் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.