16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக
சட்டப்பேரவை தேர்தல் 2026ல் 16 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
NDA கூட்டணியில் அதிமுக கட்சி மட்டும் 167 தொகுதிகளில் போட்டியிட்டது, இது 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதில் 16 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்,
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் டெபாசிட் இழந்துள்ளார். இவர் 16,507 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார்.

ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 18,420 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
எழும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அபிஷேக் ரங்கசாமி 18,191 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.
திருவிக நகரில் போட்டியிட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 23,304 வாக்குள் பெற்றார்.
இதேபோன்று வில்லிவாக்கம், ஆர்.கே.நகர், தூத்துக்குடி, திருச்சுழி, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, கொளத்தூர், பாளையங்கோட்டை, கம்பம், திருவொற்றியூர் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
