அதிமுகவில் பிளவு - எடப்பாடி பழனிசாமியா? எஸ்.பி.வேலுமணியா?

ADMK Edappadi K. Palaniswami
By Karthikraja May 11, 2026 02:10 PM GMT
Report

அதிமுகவில் இரு அணிகளாக பிளவு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் பிளவு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் கருப்பையா இன்று சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

அதிமுகவில் பிளவு - எடப்பாடி பழனிசாமியா? எஸ்.பி.வேலுமணியா? | Admk Split Into Two Eps Vs Sp Velumani

இன்னலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு வரும் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவினரும், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவினரும் என தனித்தனியாக பிரிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர். 

அதிமுகவில் பிளவு - எடப்பாடி பழனிசாமியா? எஸ்.பி.வேலுமணியா? | Admk Split Into Two Eps Vs Sp Velumani

சட்டமன்றத்திற்கு வந்து பாதியிலே கிளம்பி சென்ற அதிமுக எம்.எல்.ஏ சிவி சண்முகம், கடைசியாக சபாநாயகர் அறைக்கு சென்று பதவி பிரமாணம் செய்து கொண்டார். 

அதிமுகவில் பிளவு - எடப்பாடி பழனிசாமியா? எஸ்.பி.வேலுமணியா? | Admk Split Into Two Eps Vs Sp Velumani

காலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க 17 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதம் வழங்கினர். 

அதிமுகவில் பிளவு - எடப்பாடி பழனிசாமியா? எஸ்.பி.வேலுமணியா? | Admk Split Into Two Eps Vs Sp Velumani

மாலையில், எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கியுள்ளனர்.

இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள் எல்லா தெரிய வரும் என சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.