அதிமுக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி?

ADMK PMK BJP
By Karthikraja Mar 23, 2026 04:30 PM GMT
Report

அதிமுக கூட்டணியில், முக்கிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொகுதி பங்கீடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில், இன்று முக்கிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி? | Admk Seat Sharing To 27 For Bjp 18 For Pmk

இந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனும் பேசி, இன்று இரவிற்கு முன்னதாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி? | Admk Seat Sharing To 27 For Bjp 18 For Pmk

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் டெல்லிக்கு சென்றாலே திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதலமைச்சரின் வாடிக்கையாக உள்ளது நான் டெல்லி சென்றாலே முதலமைச்சர் பயப்படுகிறார்." என தெரிவித்துள்ளார்.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதிகளிலும், போட்டியிட்டது.

நாங்கள் 12 தொகுதிகளிலும் 12 குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டாலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை, 179 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் 12 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அதிமுக 66 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கே 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தற்போது வரை தொகுதி பங்கீட்டில் 43 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது, இதில் 7 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

இன்னும், விசிக, மார்க்சிஸ்ட், மக்கள் நீதி மையம், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி ஆகாத நிலையில், திமுகவும் 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.