உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணி,.சசிகலாவைவை கடுமையாக விமர்சித்த அதிமுக.!

Sasikala OPS Admk
By Thahir Jun 23, 2021 10:39 AM GMT
Report

சசிகலாவுக்கு அதிமுகவில் ஒரு போதும் இடமில்லை என திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுடன் பேசியவர்கள் மீது அதிமுக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து செயல்படும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாக தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர் அதிமுக வை அழித்துவிடலாம் என வஞ்சக வலையினை நாளும் விரித்துக் கொ்டிருப்பதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க போகிறேன் என்று அறிக்கை விடுத்த சசிகலா தற்போது தொண்டர்களின் உழைப்பாலும் அதிமுக மக்களின் செல்வாக்கு பெற்றிருப்பதை கண்டதும் அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்கிறார் என கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணி,.சசிகலாவைவை கடுமையாக விமர்சித்த அதிமுக.! | Admk Sasikala Tamilnadu

அதோடு சசிகலாவோடு தொடர்பு கொண்டவர்களை அதிமுகவிலிருந்து நீக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.