சசிகலாவைப் பற்றி தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது - கோகுல இந்திரா

sasikala tamilnadu india
By Jon Jan 13, 2021 12:11 PM GMT
Report

சசிக்கலவைப் பற்றி தவறாக பேசுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். சசிகலாவை தவறாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் எங்கிருந்தாலும் தாங்கள் மரியாதையுடன் போற்றுவோம் என்றும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா தெரிவித்தார்.

முதலமைச்சரையும் பெண்களையும் இழிவாகப் பேசியதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைக் கண்டித்து சென்னை அண்ணாநகரில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்றும் ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் கூறினார்.