அதிமுக பொதுச்செயலாளர்: சசிகலா வெளியிட்ட அறிக்கை

modi stalin edappadi
By Jon Mar 01, 2021 02:29 PM GMT
Report

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநளை முன்னிட்டு வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் பெங்களுரில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கொடியை தனது காரில் பயன்படுத்தினார். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைச்சர்கள், இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

எனினும், பெங்களுரிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் பயணம் செய்து பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தரப்பில் , அவரது முாகம் அலுவலகமான தி.நகர் இல்லத்தில் இருந்து அதிமுக கொடி பதியப்பட்ட மற்றும் அவரை கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அச்சமயம் அதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி புரட்சித்தலைவியின் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முகவரியில் கழகப் பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம் தியாகாராய நகர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Gallery