அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி
அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் கௌதமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இன்று முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கொள்கை பரப்பு துணை செயலர் பதவியில் இருந்து தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்து கொள்கிறேன்.
அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய பேரூர் நகர செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை அதிமுகவில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
