'நம்பீராத தம்பி' - முதல் தலைமுறை வாக்காளர்களுக்காக வீடியோ வெளியிட்ட அதிமுக!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Jiyath Apr 13, 2024 12:53 PM GMT
Report

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்காக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. தற்போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வீடியோ வெளியீடு

இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்காக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் "நகைக் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

ஆனால் இதுவரை செய்தார்களா? அதேபோல் ஓய்வூதிய திட்டமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை ஆகிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இவர்களை 'நம்ப வேண்டாம் தம்பி' என்று முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அறிவுறுத்துவதுபோல அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.