”தமிழக பட்ஜெட் தாக்கல்” அதிமுகவினர் வெளிநடப்பு
Admk
TNBudget2021
By Petchi Avudaiappan
தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று கூடியது . இதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
இதனிடையே பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வாய்ப்பளிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்த நிலையில் பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.