அதிமுக ஜெயக்குமார் ஒரு காம வெறியன் : கொந்தளித்த புகழேந்தி
ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடிபழனிச்சாமி டெபாசிட் வாங்காவிட்டால் கட்சியை ஓ.பன்னீர் செல்வத்திடம் ஓப்படைக்க வேண்டும் என புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
புகார் மனு
சமூக வலைத்தளங்களில் தன்மீது அவதூறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகார் மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி தான் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் குறித்து, ஆதாரங்களுடன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளேன்.
டெபாசிட் வாங்க முடியுமா
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் தமிழ் மகன் உசேன் ஒரு சார்பாக நடந்து கொண்டார். ஈரோடு கிழக்கு தேர்தலில் இருந்து தாங்கள் தரப்பு வெளியேறிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி டெபாசிட் வாங்குவது கூட கடினம்.
தேர்தல் முடிவு வெளியாகும் அன்று டெபாசிட் கூட வாங்க முடியாவிட்டால் ஓ. பன்னீர்செல்வத்திடம் கட்சியை ஒப்படைத்து விட வேண்டும்.
பாஜக மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அதற்காக அண்ணாமலை சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. அதிமுக ஜெயக்குமார் ஒரு காம வெறியன் எனக் கடுமையாக பேசினார்