Saturday, Jul 5, 2025

குடும்பத்தை பத்திதான் முதலமைச்சருக்கு இப்போ கவலை : கொந்தளித்த எடப்பாடியார்

ops AdmkProtest againstdmk
By Irumporai 3 years ago
Report

சொத்து வரி உயர்வை கண்டித்தும் வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

அந்த வகையில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தலமையிலும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

குடும்பத்தை பத்திதான் முதலமைச்சருக்கு இப்போ கவலை : கொந்தளித்த எடப்பாடியார் | Admk Protest Against Dmk Government

இந்தநிலையில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது: முதலமைச்சர் ஸ்டாலின் பொது மக்களை பற்றி அல்லாமல், அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலைப்படுகிறார், மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ள இந்த காலகட்டத்தில் சொத்து வரியை திமுக அரசு உயர்த்தி உள்ளது கண்டனத்துக்கு உரியது

என கூறினார். அதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளது திமுக என கூறிய ஓபிஎஸ் கொரோனா பரவல் முடிவடையாத சூழலில் சொத்துவரி உயர்வு மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளதாக கூறினார்.