திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்: தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்பு!

against ops dmk eps admk protest
By Anupriyamkumaresan Jul 28, 2021 06:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழகம் முழுவதும் இன்று திமுக அரசுக்கு எதிராக அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகள் வாக்குறுதிகளாகவே முடங்கிக்கிடக்கின்றன என அதிமுக சாடி வருகிறது.

திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்: தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்பு! | Admk Protest Against Dmk

நீட் தேர்வை ரத்து செய்யாமல் கண்துடைப்புக்காக கமிஷனை திமுக அரசு அமைத்ததாக முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் போடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.