தஞ்சை தேர் விபத்து;அதிமுக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒத்திவைப்பு..!
அதிமுக சார்பில் இன்று மாலை நடைபெறவிருந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தை அடுத்து இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து மாலை நேரத்தில் தங்கள் நோன்பை முடித்துகொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கட்சியினர் அனைத்து தரப்பு சமூதாய மக்களுடன் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,
இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் ஏற்பட்ட தேர் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்நிலையில் இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நாளை தள்ளி வைக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/u2itq3Cfs4
— AIADMK (@AIADMKOfficial) April 27, 2022