செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக-வினர் போராட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையை விட்டு வெளியேற கூறி காவல் நிலையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சியினரால் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனிடையே அதிமுக வினர் பிரச்சாரம் மேற்கொள்ளும் பல இடங்களில் காவல் துறையினர் வழக்குப் போடுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் திரண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், அருண்குமார், ஜெயராம் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுக வினர்,
செந்தில் பாலாஜி யும் தூண்டுதலின் பெயரால் அதிமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையை விட்டு வெளியேறுமாறும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.