அதிமுக சட்ட விதிகளில் புதிய திருத்தம் - ஈபிஎஸ் ஓபிஎஸ்-க்கு அதிகரிக்கும் அதிகாரம்

meeting admk ops eps tnpolitics
By Swetha Subash Dec 01, 2021 09:27 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மோதலுடன் முடிவடைந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்டு கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் ஒற்றை தலைமையின் கீழ் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக இயங்கி வந்த நிலையை 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பின் மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறையை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிமுகப்படுத்தினர்.

இந்த நிலையில் தற்போது ஒற்றைத்தலைமை நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒற்றை வாக்கில் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவருக்கும் அதிகாரம் அதிகரிக்கும் வகையில் கட்சியின் சட்ட விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

அதன்படி இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றைவாக்கு அடிப்படையில் செய்யப்படும் எனவும் கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களே முடிவு செய்வர் எனவும் கட்சியின் திட்ட விதிகளை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு உண்டு எனவும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிமுகவின் விதி எண் 20 பிரிவு 2 , விதி எண் 40 உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.