டிசம்பர் 7-ல் அதிமுக உட்கட்சி தேர்தல் - அறிவிப்பை வெளியிட்டது தலைமை கழகம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்திருகிறது.
இந்த கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவர் மற்றும் சிறப்புத் தீர்மானங்கள் உள்பட அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை தொண்டர்களே தேர்வுசெய்வார்கள் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று, அதிமுக உட்கட்சி தேர்தல் நடைப்பெற இருப்பதாக கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மேலும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு டிசம்பர் 3 முதல் 4 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் எனவும், அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5-ஆம் தேதி பகல் 11.25 மணிமுதல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/8HEX2QZjTD
— AIADMK (@AIADMKOfficial) December 2, 2021