அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சேலத்தில் தொடங்கியது
அதிமுகவின் அமைப்பு ரீதியிலான 20 மாவட்டங்களில் இன்றும், நாளையும் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும், நெல்லை, மயிலாடுதுறை, நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 20 மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உட்பட்ட பகுதிக நிர்வாகிகளுக்கான முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 13-ந் தேதியான இன்று தொடங்குகிறது.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி அமைப்பு ரீதியிலான தேர்தலை நடத்த வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் நடந்து முடிந்தது.
இதில் ஒருமனதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழுவே தேர்ந்தெடுக்கும் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது.
இதன் மூலம் அடிப்படை உறுப்பினர்களே இனி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை தேர்ந்தெடுக்கலாம்.
இந்நிலையில், சேலத்தில் நடைபெற்று வரும் அதிமுக உட்கட்சி தேர்தலை அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.