அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Aug 17, 2022 10:57 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் ஈபிஎஸ் என இருவரில் யாருக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

ஓபிஎஸ் தரப்பு தொண்டர்களை உற்சாகமாக்கியுள்ளது,இந்த நிலையில் தனது பக்கம் சாதகமான தீர்ப்பு வெளியானதால் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் : உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி என கூறினார்.

அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி | Admk Ops Press Meet At Jayalalitha Memorial

மேலும் தொண்டர்களின் இயக்கத்தை யாராலும் பிளவுபடுத்தமுடியாது என்றும் அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்; அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனகூறிய ஓபிஎஸ் .

தொண்டர்களின் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்; யாரும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்.

அரவணைத்து செல்வேன்

  தொடர்ந்து பேசிய அவர், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம். ஜூன் 23ம் தேதிக்கு முன் யாரெல்லாம் கட்சியில் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து கட்சியில் இருப்பார்கள்.

அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி | Admk Ops Press Meet At Jayalalitha Memorial

விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்கவேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு. நான் அரவணைத்து செல்வேன்.

தொண்டர்களின் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்; யாரும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா .எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம் என்று கூறினார்.