சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் 5 பேர் செல்போன் உரையாடல்!பதறிப்போன இபிஎஸ்,ஓபிஎஸ்

EPS ADMK Sasikala OPS
By Thahir Jun 24, 2021 10:31 AM GMT
Report

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்மொழிந்தனர்.இதை தொடர்ந்து சசிகலா அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 

சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் 5 பேர் செல்போன் உரையாடல்!பதறிப்போன இபிஎஸ்,ஓபிஎஸ் | Admk Ops Eps Tamilnadu

இந்தநிலையில் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் அதிமுகவினர் பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.இதையடுத்து சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்,துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வரும் ஆடியோ வெளியாகி வருகிறது. இதன் காரணமாக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள், தொடர்புடையவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சசிகலாவிடம் பேசிய சேலம் புறநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுபாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஏ. ராமகிருஷ்ணன், ஆர், சரவணன், ஆர். சண்முகப்பிரியா, ராஜகோபால், டி. சுந்தர்ராஜ் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.