அவசர பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார் ஒ.பன்னீர் செல்வம்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவசர பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரதமரிடம் ஒ.பன்னீர் செலவம் முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமரிடம் ஒ.பன்னீர்செல்வம் பேசுவார் என கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.