அதிமுக ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி?
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இனி செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி பெரும் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார். ஜெயலலிதா, சசிகலா இல்லாத நிலை ஒருபுறம், சிலரது வழிகாட்டுதல்படி சைலன்ட் மோடுக்கு சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரனின் வஞ்சக வியூகம் மறுபுறம், இதையெல்லாம் தாண்டி அதிமுக-வை வீழ்த்த திமுக தலைமையில் 13 கட்சி கூட்டணி.
இவர்கள் அனைவரையும் எதிர்த்து தனி ஒரு ஆளாக களமாடி, அதிமுக-வுக்கு கவுரமான இடத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இத்தனைக்கும் சேலம் மாவட்டம் தவிர்த்து, தமிழக மக்களுக்கு 3 ஆண்டுகளாகத்தான் எடப்பாடி பழனிசாமி நன்கு பரிச்சயமானார்.
தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சாதுர்யத்தையும், மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தி உள்ளது. உண்மையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த உயரம். ஒற்றை தலைமையாக, அதிமுக ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றால்தான், கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தமுடியும். இனி அதிமுக அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது உறுதி.