கூட்டணி முறிவுக்கு காரணமே பா.ஜ.க போட்ட அந்த கண்டிஷன் தான் - கே.சி.கருப்பணன் பரபரப்பு பேட்டி!
அதிமுக பா.ஜ.க முறிவுக்கு காரணம் அவர்கள் போட்ட கண்டிஷன் தான் என்று முன்னாள் அமைச்சர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம், பவானியில், அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ கூட்டத்தில் பேசியுள்ளார். அதில், "பா.ஜ.க - அதிமுக கூட்டணிக்காக அதிமுக எவ்வளவோ அனுசரித்து இறங்கிப்போனது.
அண்ணாமலை ஒரு சின்ன பையன். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அனுபவம் கூட வயது இல்லாத அண்ணாமலை , அண்ணாதுரை , ஜெயலலிதாவை அவதூறாக பேசுவதை தாங்கி கொள்ள முடியாது என்றும் யாராக இருந்தாலும் ஒரளவு தான் தாங்கி கொள்ள முடியும் என்றும் கூறினார்.
கண்டிஷன்
இதனைத்தொடர்ந்து, "வேலைக்காரனாக இருந்தாலும் முதலாளியிடம் ஓரளவிற்கு தான் இறங்கி செல்ல முடியும் , மறுபடியும் அவர்களிடம் கூட்டணி போக முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பிரதமராக மோடி வர வேண்டுமாம் நினைப்பதாகவும், அதே சமயம் 2026 ல் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை முதல்வராக ஆக்க வேண்டுமாம் , யாரவது ஏற்றுக்கொள்வார்களா?
எத்தனை பூத்திற்கு அவர்களுக்கு ஆள் உள்ளது என தெரியவில்லை.ஒரு பூத்திற்கு 5 பேர் முதல் 10 பேர் வரை ஒரு கட்சியின் தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என சொல்லி இரண்டரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியை நிர்பந்தம் செய்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அதனால் தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது" என்று கூறியுள்ளார்.