அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ”போர்வாள்”
அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ”போர்வாள் நாளிதழ்” கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டு கிடக்கிறது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினர், எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தலைமையிலான ஒரு அணியினர் உள்ளனர்.
இந்நிலையில் நமது எம்ஜிஆர் மற்றும் ஜெ நியூஸ் தொலைக்காட்சியில் சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது, ஏனெனில் இவை சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கிடையே இன்று போர்வாள் என்ற நாளிதழை எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதிமுக தலைமை வெளியிடும் செய்திகள், பொது செயலாளரின் அறிக்கைகள், கட்சியின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.