அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 20, 2022 09:12 AM GMT
Report

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரம் 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதகரமான நிலையில் கடந்த 11- ந் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து வருவாய்துறையினர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி,மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

சாவியை வழங்க உத்தரவு

இதையடுத்து இன்று பிற்பகல் வழக்கின் தீர்ப்பு வெளியானது.இதில் நீதிபதி அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதுமான காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! | Admk Office Key Hand Over To Edappadi Palaniswami

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து பசுமை வழிச்சாலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.