கட்சி அலுவலக வன்முறை!! இபிஎஸ்'ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!!
அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அலுவலக வன்முறை
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த பொதுக்கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிற்கு கடும் மோதல் ஏற்பட்டது. கடுமையாக இருதரப்பும் மோதிக்கொண்ட நிலையில், கட்சியில் இருந்த பல பொருட்கள் சூறையாடப்பட்டன.
உச்சநீதிமன்றம் அதிரடி
இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில், ஓபிஎஸ் தரப்பில் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜேசிடி பிரபாகர் மனுதாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், “ஜேசிடி பிரபாகர் அளித்த புகாரை விசாரணை செய்து அதில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சிபிசிஐடி காவல் துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.