நிலக்கரி சுரங்கம் வரக்கூடாது : மாநிலங்களவையில் அதிமுக எம்பி கவன ஈர்ப்பு தீர்மானம்
நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக மாநிலங்களைவியில் அதிமுக எம்பி தம்பிதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
நிலக்கரி சுரங்கம்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க தலைவர்களே, நிலக்கரி சுரங்கம் அமைக்க வேண்டாம் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தனர். நிலக்கரி சுரங்க விவகாரத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கவன ஈர்ப்பு தீர்மானம்
அதேபோல, தமிழக சட்டப்பேரவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை மாநிலங்களவையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். டெல்டா விளைநிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.