காவல்துறை மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவர் ஏன்?- அதிமுக எம்பி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராகும் முன்பிலிருந்து அவரின் பாதுகாவலராக நயீம் மூசா இருந்து வருகிறார்.
கேரளாவை சேர்ந்த நயீம் மூசா, துபாயில் பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தேர்தலையொட்டி விஜய், நயீம் மூசாவை தனது முதன்மை பாதுகாவலராக நியமித்தார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது முதல்வரான பின்பும் நயீம் மூசா விஜயின் பாதுகாவலராக அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்.
இந்நிலையில், அதிமுக எம்.பி இன்பதுரை விஜயின் பாதுகாவர் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?
மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?
அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், 'பாதுகாவலர்' என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?
Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் @TVKVijayHQ தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?
— I.S.INBADURAI (@IInbadurai) June 3, 2026
மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?
அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச்… pic.twitter.com/eeqYrIabXo
அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?
பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan