நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
மத்திய நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது 'நிர்மலா சீதாராமன், அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு' குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி "தென்னை விவசாயிகளின் நலனை குறித்து பேசவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.
பேட்டி
ஏன் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திப்பது இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர் "திமுக அரசுக்கு டெல்டா விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால் காவிரி நீரை கர்நாடகத்தில் இருந்து பெற்றுத் தந்திருக்க வேண்டும். தி
முக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை விவசாயிகள் பிரச்சனைக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.