ராஜேந்திர பாலாஜி என்ன கொலையா செய்தார்? - தமிழக ஆளுநரை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
திமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவுவதாக கூறி, அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இன்பதுரை, பாபு முருகவேல், மற்றும் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்,
''தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். இந்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
“மேலும், திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. ராஜேந்திர பாலாஜி என்ன கொலையா செய்தார்? என்றும் அவரை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காண்பிக்கிறது தமிழ்நாடு அரசு” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் 5ம் தேதியன்று தமிழக சட்டப் பேரவை கூடுகின்ற நிலையில், அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது..