முக்கிய அமைச்சர்கள் பின்னடைவு: பேரதிர்ச்சியில் அதிமுக

By Fathima May 02, 2021 05:00 AM GMT
Report

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 126 இடங்களிலும், அதிமுக கூட்டணி 89 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

அமைச்சர்களில் பெரும்பாலானோர் முன்னிலையில் உள்ள நிலையில், நான்கு அமைச்சர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர்.

ராஜபாளையத்தில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1,900 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

ராயபுரத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார்,

ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன்,

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவில் உள்ளனர்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் டிடிவி தினகரனுக்கும் கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.