அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளிவைப்பு

admkjayakumarbail ministerjayakumararrested
By Swetha Subash Feb 24, 2022 11:05 AM GMT
Report

சாலை மறியல் வழக்கு தொடர்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனு நாளை தள்ளிவைப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவைச் சார்ந்த நபரை அரை நிர்வாணமாக நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளிவைப்பு | Admk Minister Jayakumar Bail Petition

ராயபுரத்தில் தடையை மீறி சாலை மறியல் செய்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டதையடுத்து,

ஜெயக்குமார் அவர்களை மார்ச் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது புகார்தாரர் தரப்பில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கை தள்ளிவைத்தார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி.